இந்திய அரசின் உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற இராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் தற்பொழுது கௌரவிக்கப்பட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் நேரில் அழைத்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பிற்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற மற்றும் அசாத்தியமான வீர தீரச் செயல்களை முதல்வர் விஜய் அவர்கள் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். அதனைத் தொடர்ந்து,
தமிழக அரசு சார்பில் அவரது அரிய சாதனையை கௌரவிக்கும் விதமாகவும், அவரது குடும்பத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும் ரூ.48 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் தாராளமாக மீனாட்சி சுந்தரத்திடம் வழங்கினார். இந்த உயரிய நிதி மற்றும் விருது வழங்கும் நிகழ்வின் போது இராணுவ வீரரின் மனைவி, குழந்தை, அவரது தந்தை மற்றும் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த முக்கிய அதிகாரிகள் பலரும் அருகில் உடனிருந்தனர்.
எல்லையில் உயிரைப் பணையம் வைத்துப் போராடும் எளிய பின்னணி கொண்ட வீரர்களைத் தகுந்த நேரத்தில் கண்டறிந்து கௌரவிப்பதில் தங்களது அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்பதை இந்த நிகழ்வின் மூலம் முதல்வர் விஜய் அவர்கள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்…

