Monday, March 2, 2026
No menu items!

புத்தகப் பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. கடைசி நாளில் காத்திருக்கும் மெகா தள்ளுபடி ஆஃபர்!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் கடந்த சில நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்று வந்த 49-வது சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் (ஜனவரி 21) நிறைவடைகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சார்பில் நடத்தப்படும் இந்தத் திருவிழா, புத்தகப் பிரியர்களின் சொர்க்கபுரியாகத் திகழ்ந்தது. லட்சக்கணக்கான தலைப்புகளில் நூல்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டிருந்ததால், வாசகர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

இன்று கடைசி நாள் என்பதால், கண்காட்சியில் வாங்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் சிறப்புத் தள்ளுபடி சலுகைகள் (Special Discount) வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்குப் பிடித்த நூல்களைத் தள்ளுபடி விலையில் வாங்குவதற்காக, காலை முதலே வாசகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் புத்தக அரள்களை மொய்த்து வருகின்றனர்.

நிறைவு நாளான இன்று வாசகர்களின் வசதிக்காகப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலக்கியம், வரலாறு, அறிவியல், நாவல்கள் எனப் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி நேர விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு 50-வது பொன்விழா ஆண்டைக் காணவிருக்கும் இப்புத்தகக் காட்சி, இந்த ஆண்டு வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News