Monday, March 2, 2026
No menu items!

ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரத்தில் பாஜகவை சீண்டிய மஹுவா மொய்த்ரா..!! என்ன சொன்னார் தெரியுமா.?

புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா குரல் கொடுத்துள்ளார்.

“இந்தியாவிற்கு பாஜகவின் கட்டாய சலாம் தேவையில்லை” என்று அவர் பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில், தொகுப்பாளர் இந்தியில் பேசியபோது,

“நான் தமிழிசையிலேயே பேசுகிறேன்” என ஏ.ஆர்.ரஹ்மான் நகைச்சுவையாகக் கூறியது மற்றும் ‘ஜெய் ஹோ’ பாடல் தொடர்பான விவாதங்கள் இணையத்தில் பேசுபொருளானது. இதனைத் தொடர்ந்து, பாஜக மற்றும் வலதுசாரி

ஆதரவாளர்கள் சிலர் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்து வருகின்றனர். தேசபக்தி கோஷங்கள் மற்றும் கலாச்சாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து எக்ஸ்

(ட்விட்டர்) தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மஹுவா மொய்த்ரா, பாஜகவின் ஒற்றை கலாச்சார திணிப்பை வன்மையாகக் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “வேற்றுமையில் ஒற்றுமை

என்பதே இந்தியாவின் பலம். பாஜக தனக்கு விருப்பமான ஒரு கலாச்சாரத்தையோ அல்லது கோஷத்தையோ மக்கள் மீது திணிக்க முயல்வது ஏற்கத்தக்கதல்ல. ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற

உலகப்புகழ் பெற்ற ஒரு கலைஞரை, அவர் பயன்படுத்தும் மொழி அல்லது வணக்க முறையை வைத்து விமர்சிப்பது சிறுபிள்ளைத்தனமானது. இந்தியாவிற்கு பாஜகவின் ‘கட்டாய சலாம்’ (Forced Salaam) தேவையில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News