“தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்களைக் கைது செய்வதும்,
பல லட்சம் மதிப்புள்ள படகுகளைப் பறிமுதல் செய்வதும் எங்களது வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு,
கைது செய்யப்பட்ட 7 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு
நிரந்தரத் தீர்வு காண வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களின் கைது செய்தியைக் கேட்டு அவர்களது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்…

