Monday, March 2, 2026
No menu items!

பிரதமர் மோடி வருகையால் மதுராந்தகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு..!! அங்கு ட்ரோன்கள் பறக்க தடை அறிவிப்பு..

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்,

மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினரால் ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையம் (Five-tier Security) அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி மற்றும் சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள

வான்பரப்பில் ட்ரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

என காவல்துறை எச்சரித்துள்ளது. விழா நடைபெறும் இடத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News