Thursday, April 16, 2026

தங்க நகை வாங்கப் போறீங்களா..?? 8 கிராம் வாங்கினால் 9 கிராமிற்குப் பணம் – அதிர்ச்சித் தகவல்..!!

தங்கம் வாங்குவது என்பது தமிழர்களின் கலாச்சாரத்தில் மட்டுமல்ல, முதலீட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், நகைக்கடைகளில் வசூலிக்கப்படும் செய்கூலி மற்றும் சேதாரம் வாடிக்கையாளர்களின் தலையில் பெரும் சுமையை ஏற்றுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.தற்போது இது குறித்து எழுந்துள்ள முக்கிய கேள்வி என்னவென்றால், “தங்க நகை விற்பனையில் ஒழுங்குமுறை சட்டம் வருமா?” என்பதே.

இன்றைய நிலவரப்படி, ஒரு நடுத்தர வர்க்கத்து நபர் 8 கிராம் (ஒரு சவரன்) தங்கம் வாங்கச் சென்றால், அவர் மறைமுகமாக 9 கிராம் தங்கத்திற்கான விலையைச் செலுத்த வேண்டியுள்ளது.அதாவது, செய்கூலி மற்றும் சேதாரம் என்ற பெயரில், வாடிக்கையாளர் வாங்கும் நகையை விடக் கூடுதலாக ஒரு கிராமிற்கான பணத்தை விற்பனையாளர்கள் வசூலித்து விடுகின்றனர்.

இந்த மறைமுகக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க, அரசு ஒரு முறையான ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News