Monday, March 2, 2026
No menu items!

ஞாபக மறதி பிரச்சனையா..?? மூளையை சுறுசுறுப்பாக்க இந்த 5 உணவுகளைச் சாப்பிடுங்க..!!

தகவல்களைச் சேமித்து, தேவைப்படும்போது மீட்டெடுக்கும் மூளையின் திறனே ஞாபக சக்தி. யோகா மற்றும் மனப்பயிற்சிகள் இதற்கு உதவினாலும், நாம் உண்ணும் உணவே மூளையின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில், நினைவாற்றலை அதிகரிக்க உதவும் 5 முக்கிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.முதலாவதாக, வால்நட்ஸ் பருப்பைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் கணிசமாக அதிகரிக்கும். இரண்டாவதாக, வல்லாரை கீரை; இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன்,

அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற மறதி நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.மூன்றாவதாக, செவ்வாழையில் உள்ள வைட்டமின் பி6 (பைரிடாக்ஸின்) மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. நான்காவதாக, காளானில் நிறைந்துள்ள வைட்டமின் பி12 நோய் எதிர்ப்பு சக்தியையும், மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

இறுதியாக, பன்னீரில் உள்ள புரோட்டீன் மற்றும் வைட்டமின் பி12, மூளையைச் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இயங்கச் செய்கிறது. எனவே, தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் மூளைக்கு வேலை கொடுப்பவர்கள் இந்த உணவுகளைத் தினமும் சேர்த்துக்கொள்வது அவசியம்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News