Monday, March 2, 2026
No menu items!

தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்..?? மருத்துவர்கள் கூறும் அறிவுரை..!!

“தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது” என்ற பொதுவான கருத்து இருந்தாலும், அது அளவுக்கு அதிகமானால் ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலுக்குத் தேவையானதை விட அதிகப்படியான தண்ணீரைக் குடிக்கும்போது, அது மூளையின் செயல்பாட்டைப் பாதிப்பதோடு, சிறுநீரகங்களுக்குக் கடும் பணிச்சுமையை ஏற்படுத்துகிறது.

ஆரோக்கியமானவர்களுக்கு இது பெரிய பாதிப்பைத் தராவிட்டாலும், சிரோசிஸ் (Cirrhosis) போன்ற கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு இது பேராபத்தாக முடியும். கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் அதிக நீர் அருந்தும்போது, உடலில் சோடியம் அளவு குறைந்து, வயிறு மற்றும் உடலில் வீக்கம் ஏற்படக்கூடும். எனவே, கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி, அளவாகவே நீர் அருந்த வேண்டும்.

பொதுவாக ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதே போதுமானது. தாகம் எடுக்கும்போது ஒரே நேரத்தில் நிறைய குடிக்காமல், நாள் முழுவதும் சிறிது சிறிதாக அருந்துவதே சிறந்தது. தொடர் தலைவலி, குமட்டல், தசைப்பிடிப்பு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை அதிக நீர் அருந்துவதன் அறிகுறிகளாகும்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News