தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான திருப்பமாக, தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கியப் புள்ளியான வைத்திலிங்கம், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, டெல்டா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வைத்திலிங்கம் தனி நபராக இணையாமல்,
தனது பலத்தைக் காட்டும் வகையில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் வந்து திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.ஓபிஎஸ் அணியின் முக்கியத் தளபதிகளில் ஒருவராக வலம் வந்த வைத்திலிங்கம், தற்போது திமுக பக்கம் தாவியிருப்பது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் அவருக்குச் சால்வை அணிவித்து, கழகத்திற்கு வரவேற்றார். இந்த மெகா இணைப்பு விழா மூலம் தஞ்சை மாவட்டத்தில் திமுகவின் கரம் மேலும் வலுப்பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்…

