உலகப் புகழ்பெற்ற சாகச வீரர் அலைன் ராபர்ட், எந்தவிதமான பாதுகாப்புக் கயிறுகளோ அல்லது உபகரணங்களோ இன்றி தென்கொரியாவின் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான 101 மாடிகள் கொண்ட வானளாவிய
கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் ஏறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பிரெஞ்சு ஸ்பைடர் மேன்” என்று அழைக்கப்படும் இவர், வெறும் கைகளைப் பயன்படுத்தி கட்டிடத்தின் செங்குத்தான கண்ணாடிக்
கதவுகள் மற்றும் இரும்புத் தூண்கள் வழியாக லாவகமாக மேலேறினார். இவர் ஏறுவதைக் கண்ட கட்டிடத்தின் உள்ளே இருந்த ஊழியர்களும் பொதுமக்களும் மிகுந்த ஆச்சரியத்துடன் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.
பாதுகாப்பு விதிமீறல் காரணமாக பாதியிலேயே காவல்துறையினரால் இவர் தடுத்து நிறுத்தப்பட்டாலும், இவரது இந்த துணிச்சலான முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எவ்வித அச்சமுமின்றி மரணத்தை முத்தமிடும் இந்த சாகசம் சிகரம் தொடும் மனிதர்களின் விடாமுயற்சிக்குச் சான்றாக அமைந்துள்ளது…

