ஐரோப்பிய கார்கள் மற்றும் மதுபானங்களை விரும்புவோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் விளைவாக, அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் பெரிய வீழ்ச்சி ஏற்படவுள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் 96.6% பொருட்களின் மீதான வரி குறைக்கப்படும் அல்லது முழுமையாக நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் அதிக வரியுடன் விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், பீர் மற்றும் ஒயின் ஆகியவற்றின் விலையும் இதன் மூலம் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. நடுத்தர மற்றும் உயர்தர வர்க்கத்தினரிடையே இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டுப் பொருட்களின் விலை குறைவது உள்ளூர் சந்தையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

