Monday, March 2, 2026
No menu items!

ஜோ ரூட் செஞ்சுரி – கொழும்பு மைதானத்தில் இங்கிலாந்து வீரரின் அதிரடி ஆட்டம்..!!

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இலங்கை பந்துவீச்சாளர்களைத் திறம்படச் சமாளித்த அவர், தனது 20வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார்.

பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட், 106 பந்துகளைச் சந்தித்து 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். அவரது இந்தச் சிறப்பான இன்னிங்ஸில் 9 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.

நெருக்கடியான நேரத்தில் நிதானமாகத் தொடங்கி, பின்னர் அதிரடியாக ரன் குவித்த ஜோ ரூட்டின் ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு வலு சேர்த்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜோ ரூட் அடித்த இந்த சதம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News