Saturday, April 18, 2026

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – இபிஎஸ் கொடுத்த மெகா வாக்குறுதி..!!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் காளை வளர்ப்போர் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டி உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பதிவு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் காளைகளுக்கு அரசு சார்பிலேயே காப்பீடு (Insurance) செய்து தரப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பாதுகாக்கவும்,

அதில் ஈடுபடும் வீரர்களின் நலனை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் பேசியது, மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News