டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா அல்லது புறக்கணிக்குமா என்ற நீண்ட நாள் குழப்பத்திற்கு வரும் வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. இது குறித்து இறுதி முடிவை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளது.
டி20 உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் பங்கேற்பு குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக, அணியின் பாதுகாப்பு மற்றும் அரசாங்கத்தின் அனுமதி ஆகியவை இந்த முடிவில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தான் அரசுடன் கலந்தாலோசித்து,
அணியை அனுப்புவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் கௌரவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும். வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்திற்குப்
பிறகு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்,” என்று வாரியத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பாகிஸ்தான் இந்தத் தொடரில் இருந்து விலகினால், அது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
மறுபுறம், பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் அணி உலகக்கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். வெள்ளிக்கிழமை வெளியாகும் அறிவிப்பையே ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உற்று நோக்கி வருகிறது…

