Monday, March 2, 2026
No menu items!

தொடர் தோல்விக்கு ‘எண்ட் கார்டு’ – அந்நிய மண்ணில் இங்கிலாந்து செய்த தரமான சம்பவம்..!!

அந்நிய மண்ணில் தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அந்த அணி அசத்தியுள்ளது.கடைசியாக 2023-ம் ஆண்டுக்குப் பிறகு, அந்நிய மண்ணில் இங்கிலாந்து அணி கைப்பற்றும் முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். கடந்த காலங்களில் மேற்கிந்தியத் தீவுகள்,

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராகத் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்திருந்த நிலையில், இந்த வெற்றி இங்கிலாந்து அணிக்கு புது உற்சாகத்தை அளித்துள்ளது.நேற்று நடைபெற்ற தீர்மானகரமான போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 357 ரன்கள் குவித்தது.

கடினமான இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் 304 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம், நீண்ட நாட்களாகத் தொடர்ந்த தங்களது மோசமான சாதனைக்கு இங்கிலாந்து அணி தற்போது ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News