Monday, March 2, 2026
No menu items!

“இதை செய்தால் மீண்டும் பவருக்கு வரலாம்” – காங்கிரஸுக்கு அட்வைஸ் செய்த விஜய்யின் அப்பா..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்துத் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது அதிகாரத்தில் இல்லாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சி மீண்டும் செல்வாக்குப் பெற ஒரு வழி உள்ளதாகத் தெரிவித்தார். “விஜய் கொடுக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால்,

தற்போது ‘பவர்’ (அதிகாரம்) இல்லாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ‘பவருக்கு’ வரும்,” என்று அவர் கூறினார்.வரவிருக்கும் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்தும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமா அல்லது தனித்து நிற்குமா என்ற விவாதத்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்தப் பேட்டி மீண்டும் தொடங்கி வைத்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News