தமிழக அரசியல் களத்தில் அதிமுகவுக்கும், விஜய்யின் தவெக கட்சிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விஜய்யைக் கடுமையாகச் சாடியுள்ளார்.செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவினர் ஏன் விஜய்யைத் தொடர்ந்து விமர்சிக்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்தார். “விஜயை நாங்களாகவே திட்டவில்லை.
அவர் எங்களைத் திட்டினால், நாங்கள் திருப்பிக் கேட்காமல் அல்லது திட்டாமல் இருக்க முடியாது,” என்று அவர் விளக்கமளித்தார்.மேலும் விஜய்யின் அரசியல் பாணியைக் கிண்டல் செய்த அவர், “விஜய் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்கிறார்,” என்று விமர்சித்தார்.
எங்களை விமர்சித்ததால் மட்டுமே நாங்கள் விஜய்யை விமர்சித்தோம் என்றும், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற ரீதியில் அவரது பதில் அமைந்திருந்தது. செல்லூர் ராஜுவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது…

