Monday, March 2, 2026
No menu items!

பொடுகை விரட்ட பூண்டு போதும்..!! 2 எளிய வழிகள் – பாட்டி வைத்தியம் இதோ..!!

தலைமுடி பிரச்சனைகளில் ஆண், பெண் இருபாலரும் சந்திக்கும் மிகப்பெரிய சவால் பொடுகுத் தொல்லை. இதற்கு விலையுயர்ந்த ஷாம்புகளைப் பயன்படுத்துவதை விட, நம் சமையலறையில் உள்ள பூண்டைப் பயன்படுத்தினாலே நல்ல பலன் கிடைக்கும்.முதல் முறையில், 5 பல் பூண்டை நன்றாக அரைத்து, அதனுடன் 2 ஸ்பூன் தேன் கலந்து தலையில் பேக் போலப் போட வேண்டும்.

20 முதல் 30 நிமிடங்கள் கழித்துத் தலைமுடியை அலசினால் பொடுகுத் தொல்லை நீங்கும்.இரண்டாவது முறையில், அரை கப் தேங்காய் எண்ணெயில் 5 பல் பூண்டு சேர்த்துச் சூடாக்க வேண்டும். இந்த எண்ணெய் ஆறியதும், தலைமுடியில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊறவைத்து,

பின்னர் மென்மையான ஷாம்பு கொண்டு குளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், முடி வேர்கள் பலம் பெறுவதுடன் பொடுகுத் தொல்லை நிரந்தரமாகச் சரியாகும் என்று அழகுக்கலை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News