பெண்கள் தங்களது உதடுகளை எப்போதும் அழகாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள். ஆனால், வறண்ட வானிலை மற்றும் போதிய பராமரிப்பின்மையால் ஏற்படும் உதடு வெடிப்பு அழகைக் கெடுப்பதோடு வலியையும் தருகிறது. இதற்கு வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்துத் தீர்வு காணலாம்.
இயற்கை வைத்திய முறைகளின்படி, தேன் சிறந்த மாய்ஸ்சரைசராகச் செயல்படுகிறது. இதை உதட்டில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் ஈரப்பதம் கிடைக்கும். அடுத்ததாக, தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி உலரவிட்டுச் சுத்தம் செய்வது வெடிப்புகளைச் சரிசெய்யும்.
மூன்றாவதாக, கற்றாழை ஜெல்லலை நேரடியாகத் தடவி உலர்ந்த பின் கழுவலாம். கடைசியாக, எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து தடவி, சிறிது நேரம் கழித்துத் துடைத்து வந்தால் உதடுகள் பளபளப்பாகவும், வெடிப்பின்றியும் இருக்கும் என்று அழகுக்கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்…

