Monday, March 2, 2026
No menu items!

ஒட்டுக்கு பணம் கொடுக்காத ஒரே கட்சி நாம் தமிழர் தான் – மேடையில் முழங்கிய சீமான்..!!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் அறநெறிகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்திருக்கும் சவால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் அணுகுமுறையை மிகக் கடுமையாக விமர்சித்தார்.”தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது” என்று குறிப்பிட்ட சீமான்,

“காசு கொடுக்காமல் தேர்தலைச் சந்திக்கத் தமிழ்நாட்டில் எத்தனை தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள்?” என்ற நேரடி கேள்வியை எழுப்பினார். தேர்தல் காலங்களில் பண பலத்தைப் பயன்படுத்தி வாக்கு வங்கி உருவாக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.தொடர்ந்து பேசிய அவர், தனது கட்சியான நாம் தமிழர் கட்சி மட்டுமே எந்தவித லஞ்சமும் இன்றி தேர்தலைச் சந்திக்கிறது என்றார்.

“நான் மட்டுமே ஒரு ரூபாய் கூடக் கொடுக்காமல் மக்களின் உண்மையான வாக்குகளைப் பெற்று வருகிறேன்” என அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். நேர்மையான அரசியல் மாற்றத்தை விரும்பும் மக்கள் தம் பக்கம் இருப்பதாக அவர் கூறினார்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News