இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக, சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வரும் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பிப்ரவரி 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடர் வேலை நாட்களில் நடைபெறுவதே மரபாக இருந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துள்ள போதிலும்,
அரசு அந்த நாளிலேயே பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அப்போதைய நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா விடுமுறை நாளில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தார்.நிர்மலா சீதாராமன் அவர்கள் தொடர்ந்து நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று ,
பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த ‘ஞாயிறு பட்ஜெட்’ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்தப் பார்வையும் நாளை காலை நாடாளுமன்றத்தின் பக்கம் திரும்பியுள்ளது…

