Saturday, April 18, 2026

கனடாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை..!! சீனாவுடன் வர்த்தகம் செய்தால் 100% வரி – அதிரடி அறிவிப்பு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அண்டை நாடான கனடாவுக்கு மீண்டும் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். சீனாவுடன் எந்தவொரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தையும் கனடா மேற்கொள்ளக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். ஒருவேளை கனடா சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்தினால், அதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.ஏற்கனவே கனடா நாட்டுப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்த நிலையில்,

தற்போது இந்த புதிய மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சீனாவுடனான வர்த்தகத் தொடர்புகள் அமெரிக்காவின் பொருளாதார நலன்களைப் பாதிக்கும் எனக் கருதும் டிரம்ப், கனடாவை தனது கட்டுப்பாட்டிற்குள் வைக்க இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தால் கனடாவின் ஏற்றுமதி மற்றும் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் ,

என வல்லுநர்கள் கணித்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மோதல் சர்வதேச வர்த்தகச் சந்தையில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க கனடா மீது டிரம்ப் அழுத்தம் கொடுப்பது இது முதல் முறையல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News