தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து நகைப்பிரியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து மதிய வர்த்தகத்தில் மேலும் ரூ.1,920 அதிகரித்து, மொத்தம் சவரனுக்கு ரூ.2,560 வரை உயர்ந்துள்ளது. இந்த அதிரடி விலை உயர்வால், சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14,270-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. திருமண சீசன் நெருங்கும் வேளையில், இந்த இமாலய விலை உயர்வு நடுத்தர மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை நிலவரத்தை விட மாலை நிலவரம் நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்குவோருக்கு இது சாதகமாக இருந்தாலும், ஆபரணமாக வாங்குவோருக்கு இது பெரும் சுமையாகும்…

