Monday, March 2, 2026
No menu items!

கழுத்து கருமை நீங்க பீட்ரூட் – இதோ எளிய வீட்டு வைத்தியம்.!!

கழுத்து பகுதியில் ஏற்படும் கருமை, புள்ளிகள் மற்றும் தழும்புகளை வீட்டிலுள்ள இயற்கை பொருட்களைக் கொண்டே எளிதாகப் போக்க முடியும். தூசி, வியர்வை, சூரியக் கதிர்கள், ஹார்மோன் மாற்றங்கள் அல்லது நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே பெரும்பாலும் கழுத்து கருமையாகத் தொடங்குகிறது. இதற்கு விலையுயர்ந்த சிகிச்சைகளைத் தேடிச் செல்லாமல், பீட்ரூட் சாறு, ஊறவைத்த சியா விதைகள், எலுமிச்சை சாறு, தக்காளி மற்றும் கடலை மாவு கலந்த இயற்கை ‘ப்ளீச்’ முறையை முயற்சி செய்யலாம்.

அரைத்த சியா விதை பேஸ்டுடன் மற்ற சாறுகள் மற்றும் கடலை மாவு சேர்த்து கெட்டியான கலவையாகத் தயார் செய்து, கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். பின்னர் கைகளால் மென்மையாக மசாஜ் செய்தபடி கழுவினால், சருமம் ஆழமாகச் சுத்திகரிக்கப்பட்டு பளபளப்பாக மாறும். இந்த இயற்கை முறை சருமத்திற்கு ஊட்டம் அளிப்பதோடு, கருமையை படிப்படியாகக் குறைத்து நிறத்தை மேம்படுத்தும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News