Monday, April 13, 2026

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி.. விளையாட பாகிஸ்தான் அரசு அனுமதி..!!

கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறுவது தற்போது உறுதியாகியுள்ளது. வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணிக்கு எதிராக விளையாடப் போவதில்லை

என பாகிஸ்தான் அரசு ஆரம்பத்தில் கறாராக மறுப்பு தெரிவித்திருந்தது. இதனால் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்,

இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேசம், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுத்தன. மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி (ICC), பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இந்தத் தொடர் முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் விளைவாக, இந்தியாவுக்கு எதிராக விளையாட பாகிஸ்தான் அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.

இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. விரைவில் இப்போட்டிக்கான அட்டவணை மற்றும் மைதானம் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News