Monday, March 2, 2026
No menu items!

குளிர்கால கண் எரிச்சல் மற்றும் வறட்சி நீங்க… இதோ ஒரு எளிய ‘ஐ-மாஸ்க்’..!!

குளிர்காலத்தில் நிலவும் வறண்ட வானிலை மற்றும் அதிகரித்து வரும் காற்று மாசினால் சருமம் மட்டுமின்றி கண்களும் அதிக பாதிப்புக்குள்ளாகின்றன. இதனால் கண்களில் அரிப்பு, எரிச்சல் மற்றும் கண்கள் சிவத்தல் போன்ற தொற்று பாதிப்புகள் ஏற்படுவது தற்போது அதிகரித்துள்ளது. கண்களின் உணர்திறனைக் கருத்தில்கொண்டு, இதற்காகத் தயார் செய்யப்படும் இயற்கை ஐ-மாஸ்க் சிறந்த தீர்வாக அமைகிறது. 2 தேக்கரண்டி காய்ச்சாத பச்சை பால், 2 தேக்கரண்டி மசித்த வாழைப்பழம் மற்றும் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட்டைத் தயார் செய்ய வேண்டும்.

இந்த கலவையை மூடிய கண்களின் இமைகள் மற்றும் கண்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளில் மென்மையாகத் தடவலாம். சுமார் அரை மணி நேரம் அப்படியே ஊறவிட்ட பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் கண்களுக்குக் குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் கிடைக்கும். கற்றாழை மற்றும் பாலில் உள்ள ஈரப்பதம் கண்களின் வறட்சியை நீக்கி, எரிச்சலைக் குறைக்க உதவுகிறது.

சருமத்தைப் போலவே கண்களையும் முறையாகப் பராமரிப்பதன் மூலம் குளிர்காலத் தொற்றுகளிலிருந்து தப்பிக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தப் பராமரிப்பு முறை கண்களைப் பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் எளிய வழியாகும்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News