Thursday, April 16, 2026

எச்சரிக்கை.. இந்தியாவில் பெருகும் போலி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் – அதிர வைக்கும் புள்ளிவிவரம்..!!

இந்தியாவில் செல்போன் பயனர்களுக்கு வரும் தேவையற்ற ஸ்பேம் (Spam) அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட பல மடங்கு அதிகரித்துள்ளதாக ‘ட்ரூகாலர்’ (Truecaller) நிறுவனம் தனது 2025-ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்: இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் மட்டும் சுமார் 4,168 கோடி ஸ்பேம் அழைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் வங்கி மோசடி, காப்பீடு தொடர்பான போலியான வாக்குறுதிகள் மற்றும் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தொல்லை தரும் அழைப்புகளில் இருந்து தப்பிக்க, இந்தியப் பயனர்கள் சுமார் 1,189 கோடி அழைப்புகளை பிளாக் (Block) செய்துள்ளனர். இது மக்கள் ஸ்பேம் அழைப்புகள் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதை காட்டுகிறது.

குறுந்தகவல் மோசடிகள்: அழைப்புகளைத் தாண்டி, குறுந்தகவல்கள் (SMS) மூலமாகவும் மோசடிகள் பெருமளவில் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டில் மட்டும் 12,903 கோடி குறுந்தகவல்கள் ஸ்பேம் (Spam Messages) என அடையாளம் காணப்பட்டுள்ளன. பரிசு விழுந்திருப்பதாகக் கூறி வரும் லிங்க்குகள் (Links) மற்றும் கேஒய்சி (KYC) அப்டேட் என்ற பெயரில் வரும் குறுந்தகவல்களே இதில் அதிகம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பொதுமக்கள் தங்களுக்குத் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் சந்தேகத்திற்குரிய குறுந்தகவல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News