Sunday, March 1, 2026
No menu items!

இந்தியாவில் பாமாயில் இறக்குமதி அதிரடி உயர்வு..!! 4 மாதங்களில் இல்லாத சாதனை அளவு..!!

இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதி குறித்த புதிய புள்ளிவிவரங்களை இந்திய எண்ணெய் பிரித்தெடுப்பு சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 7.66 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய உயர்வாகும். முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது இது 51% வளர்ச்சி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியைப் பொறுத்தவரை, நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 2024-25 நிதியாண்டில் 40.50 லட்சம் டன்னாக இருந்தது. இதுவே 2025-26 நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 39.60 லட்சம் டன்னாகச் சற்று குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் சமையல் எண்ணெய் இருப்பு 8.64 லட்சம் டன்னாக உள்ளது.

உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யப் பாமாயில் இறக்குமதி கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன. இந்த இறக்குமதி உயர்வு சமையல் எண்ணெய் சந்தையில் விலையையும் விநியோகத்தையும் சீராக வைத்திருக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி அதிகரிப்பு குறித்த இந்தத் தரவுகள் தொழில் துறையினரிடையே முக்கிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News