Friday, July 17, 2026

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் – சென்னையில் லிட்டருக்கு ரூ.1.70 வரை உயர்ந்து அதிர்ச்சி..!!

தமிழகத் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாகக் கட்டுக்குள் இருந்த எரிபொருள் விலையானது, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து வாகன ஓட்டிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய விலை பட்டியலின்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69 காசுகள் வரை உயர்ந்துள்ளது.இந்த அதிரடி விலை உயர்வைத் தொடர்ந்து, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.45 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.பெட்ரோல் விலையை விட ஒரு படி மேலே போய், டீசலின் விலையும் இன்று கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பது லாரி மற்றும் கனரக வாகன உரிமையாளர்களைக் கலக்கமடையச் செய்துள்ளது.

சென்னையில் இன்று டீசல் விலையானது லிட்டருக்கு ரூ.1.71 காசுகள் வரை உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் டீசல் ரூ.101.26 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவக்கூடிய கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் நாணய மதிப்பு நிலவரங்களின் அடிப்படையில் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் தவித்து வரும் சாமானிய நடுத்தரக் குடும்பங்களுக்கு, இந்த திடீர் எரிபொருள் விலையேற்றம் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருப்பதால், வரும் நாட்களில் காய்கறி மற்றும் பிற சரக்குப் போக்குவரத்துச் செலவுகளும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தால் அது சந்தையில் உள்ள மற்ற அன்றாடப் பொருட்களின் விலையையும் மறைமுகமாக உயர்த்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News