Monday, April 13, 2026

அமெரிக்காவின் மிரட்டல் இனி எடுபடாது! கனடா பிரதமர் மார்க் கார்னி கொடுத்த மரண அடி!

அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வெளியுறவு அணுகுமுறையை கனடா பிரதமர் மார்க் கார்னி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமீபத்திய உரை ஒன்றில் பேசிய அவர், “பொருளாதார பலம் என்பது தற்போது மற்ற நாடுகளை அச்சுறுத்தும் ஒரு ஆயுதமாக மாறியுள்ளது. இது ஒரு ஆபத்தான புதிய யதார்த்தம்,” என்று அமெரிக்காவைக் மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், “சர்வதேச விதிகள் நம்மைக் கைவிடும்போது, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பழைய கூட்டணிகளும், புவியியல் ரீதியான பாதுகாப்பும் நமக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற காலம் கடந்துவிட்டது,” என்று வேதனை தெரிவித்தார்.

உணவு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பில் சுயசார்பு இல்லாத நாடுகள் மற்றவர்களின் தயவில்தான் வாழ வேண்டியிருக்கும் என்று எச்சரித்த அவர், வல்லரசு நாடுகளின் மிரட்டல்களுக்குப் பணியாமல் இருக்க, நடுத்தர சக்திகள் (Middle Powers) ஒன்றிணைந்து ஒரு புதிய பாதையை உருவாக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News