Saturday, April 18, 2026

கழுத்து கருமை மறைய வேண்டுமா..?? உருளைக்கிழங்குடன் இதை சேர்த்து தடவுங்க..!!

பெண்கள் தொடர்ந்து செயின் அணிவதாலும், ஆண்கள் அணியும் சட்டை காலராலும் கழுத்துப் பகுதியில் கருமை படர்ந்து, சருமத்தின் அழகைக் கெடுக்கிறது. இந்தக் கரும்புள்ளிகளை நிரந்தரமாக விரட்ட, நம் வீட்டிலேயே இருக்கும் எளிய பொருட்களை வைத்தே தீர்வு காண முடியும் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள்.

இதற்குத் தேவையானவை ஒரு உருளைக்கிழங்கு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் அரை ஸ்பூன் தேன் மட்டுமே. முதலில் உருளைக்கிழங்கைத் தோல் சீவி, அதன் சாற்றைத் தனியாகப் பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் அரிசி மாவு மற்றும் தேனைக் கலந்து பேஸ்ட் போல தயார் செய்யவும்.

இந்தக் கலவையை கழுத்தில் கருமை உள்ள இடங்களில் தடவி, மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் போதும். வாரம் இருமுறை இதைத் தொடர்ந்து செய்து வந்தால், பிடிவாதமான கழுத்துக் கருமை காணாமல் போய்விடும்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News