விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கட்சியின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகப் புதிய மாநிலப் பொறுப்பாளர்களை நியமித்து இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு (சீட்) மறுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களைச் சமாதானப்படுத்தும் விதமாக இந்த முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, எஸ்.எஸ். பாலாஜி எம்.எல்.ஏ கட்சியின் மாநிலப் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேபோல், மற்றொரு முக்கிய நிர்வாகியான ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ கட்சியின் மாநில முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கட்சியில் நிலவக்கூடிய அதிருப்திகளைச் சரி செய்யவும், நிர்வாக ரீதியான பணிகளைத் தொய்வின்றி முன்னெடுக்கவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24, 2026 தேதியிட்ட இந்த நியமனப் பட்டியலைத் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.தேர்தல் பணிகளுக்குப் பிறகு கட்சியைப் பலப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டதற்குப் பின்னால் உள்ள அரசியல் வியூகங்கள் குறித்துத் தொண்டர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
சட்டம் மற்றும் சமூகப் பணிகளில் தீவிரமாகச் செயல்படும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பதவி, கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய நியமனங்களுக்கு கட்சியின் பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்…

