Monday, June 1, 2026

ஒரே நாளில் ரூ.993 உயர்வு – வணிக சிலிண்டர் விலை ஏற்றத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்..!!

தேர்தல் முடிவடைந்த சில நாட்களிலேயே மத்திய அரசு வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் வணிக சிலிண்டர் விலை ரூ.993 உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு வணிகர்களுக்கு மட்டுமல்லாமல், சாதாரண மக்களுக்கும் பெரும் சுமையாக மாறும் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிந்தவுடன் விலை உயர்வை அமல்படுத்துவது மத்திய அரசின் வழக்கமான யுக்தி என்று அவர் குற்றம் சாட்டினார். சிலிண்டரைத் தொடர்ந்து அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். மே 1, 2026 தேதியிட்ட இந்த அறிவிப்பு, உணவகங்கள் மற்றும் சிறு தொழில் செய்வோர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஏற்கனவே மக்களை வாட்டி வரும் நிலையில்,

இந்த மெகா விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.மத்திய அரசு உடனடியாக இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தேர்தல் நேரத்தில் அமைதி காத்துவிட்டு, தற்போது மக்களின் வயிற்றில் மத்திய அரசு அடிப்பதாக ராகுல் காந்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்….

Related Articles

Stay Connected

0FansLike

Latest News