Friday, July 17, 2026

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு..!! இல்லத்தரசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று மாற்றி அமைத்துள்ளன. இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகளும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. மே 19, 2026 தேதியிட்டு வெளியாகியுள்ள இந்த விலை உயர்வு அறிவிப்பு, நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் விநியோகச் சங்கிலித் தடங்கல் காரணமாக இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் திடீர் விலை உயர்வு, இன்று காலை முதலே அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் அமலுக்கு வந்துள்ளது.டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. தொடர்ச்சியாக எரிபொருள் விலை ஏறுமுகத்தில் இருப்பது சிறு குறு தொழில்களையும் மற்றும் லாரி உரிமையாளர்களையும் கடுமையாகப் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.

சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதால், அரசு இதில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த வரியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போதைய சூழலில் இந்த விலை ஏற்றம் சந்தையில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News