Monday, April 13, 2026

ஐரோப்பிய நாடுகள் மீது புதிய வரி.?? – டிரம்ப் விடுத்த மிரட்டல்..!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு மீண்டும் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். கிரீன்லாந்து தீவை அமெரிக்காவிடம் ஒப்படைக்காவிட்டால், ஐரோப்பிய நாடுகள் மீது புதிய வரிகள் விதிக்கப்படும் என்று அவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்துப் பேசிய டிரம்ப், இந்த வரி விதிப்பு நடவடிக்கையில் தான் “100% உறுதியாக” இருப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வர்த்தக ரீதியாகவும், ராஜரீதியாகவும் ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் டிரம்ப் மீண்டும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையில், ராணுவப் படையெடுப்பு நடத்தி கிரீன்லாந்தை ,

அமெரிக்கா கைப்பற்றுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, டிரம்ப் “No Comments” (கருத்து கூற விரும்பவில்லை) என்று பதிலளித்துள்ளார். படையெடுப்பு குறித்த கேள்விக்கு அவர் மறுப்பு தெரிவிக்காமல் மவுனம் காத்தது, விவகாரத்தின் தீவிரத்தை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News