Monday, April 13, 2026

படித்தவர்கள் கூட செய்ய யோசிப்பார்கள்.. கெத்து காட்டிய வங்காளத்து பாட்டி! குவியும் பாராட்டு

மேற்கு வங்கத்தில் ஓடும் ரயில் ஒன்றில் டிக்கெட் பரிசோதகர் (TTE) வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்குக் காத்திருந்த ஆச்சரியம் இணையத்தையே கலக்கியுள்ளது. ரயிலில் ஆட்டுக்குட்டியுடன் பயணித்த ஒரு மூதாட்டியிடம் டிக்கெட் கேட்டபோது, அவர் சிறிதும் தயக்கமின்றி மூன்று டிக்கெட்டுகளை எடுத்து நீட்டினார். “மூன்று பேரா?” என அதிகாரி குழப்பத்துடன் கேட்க, “நானு, இவரு, அப்புறம் என் ஆட்டுக்குட்டி” என்று வெள்ளந்தியாகப் பதிலளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் அந்தப் பாட்டி.

டிக்கெட் பரிசோதகர் வேடிக்கையாக, “ஆட்டுக்குட்டிக்கு டிக்கெட் இருக்கா?” என்று வங்காள மொழியில் கேட்டபோது, அந்தப் பாட்டி பெருமையுடன் ஆட்டுக்குட்டிக்கான டிக்கெட்டையும் சேர்த்தே காட்டியுள்ளார். ஆடுகளைப் கால்நடைகளாகப் பார்க்காமல், தன் குடும்பத்தில் ஒருவராக பாவித்து, அதற்கும் நேர்மையாகப் பயணச்சீட்டு எடுத்த அந்த மூதாட்டியின் செயல், அங்கிருந்த அதிகாரியையும் சக பயணிகளையும் நெகிழ வைத்தது. அந்த அதிகாரி சிரித்துக்கொண்டே, “பரவாயில்லையே, ஆட்டுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துருக்கீங்களே” எனப் பாராட்டும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான சிறிது நேரத்திலேயே வைரலாகப் பரவியது. படித்தவர்களே பலரும் டிக்கெட் எடுக்காமல் ஏமாற்றிப் பயணிக்கும் இக்காலத்தில், சட்டம் தெரியாத ஒரு எளிய மூதாட்டி காட்டிய இந்தத் தார்மீக நேர்மைக்கு இணையவாசிகள் சல்யூட் அடித்து வருகின்றனர். “இதுதான் உண்மையான இந்தியா,” என்றும், “அந்தப் பாட்டியின் சிரிப்பில் தெரியும் பெருமிதம் எதற்கும் ஈடாகாது,” என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News