Monday, March 2, 2026
No menu items!

மழைக்கு உதவும் AI.. அமீரகத்தின் Cloud Seeding திட்டத்தில் இணையும் புதிய தொழில்நுட்பம்..!! முழு விவரம் உள்ளே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) செயல்படுத்தப்பட்டு வரும் ‘கிளவுட் சீடிங்’ (Cloud Seeding) எனப்படும் செயற்கை மழை திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பாலைவனப் பிரதேசமான அமீரகத்தில்,

நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவும், வெப்பத்தைத் தணிக்கவும் நீண்ட காலமாக செயற்கை மழை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தை மேலும் துல்லியமாகவும்,

திறம்படவும் செயல்படுத்த அமீரக வானிலை ஆய்வு மையம் (NCM) முடிவு செய்துள்ளது. புதிதாக இணைக்கப்படவுள்ள இந்த AI தொழில்நுட்பம், செயற்கை மேகங்களைக் கண்காணிப்பதிலும்,

எப்போது, எந்த இடத்தில் கிளவுட் சீடிங் செய்தால் அதிக மழைப்பொழிவை பெற முடியும் என்பதைத் துல்லியமாக கணிப்பதிலும் முக்கிய பங்காற்றும். இதன் மூலம் செயற்கை மழைத் திட்டத்தின் வெற்றி விகிதம்

அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கால தொழில்நுட்பமான AI-யை, வானிலை ஆராய்ச்சியில் இணைக்கும் அமீரகத்தின் இந்த முயற்சி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News