Monday, April 13, 2026

தயாரிப்பாளருக்கு ஜாக்பாட் அடித்த ‘சிறை’..!! பட்ஜெட் 6 கோடி வசூல் இத்தனை கோடியா..??

றிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபுவின் 25-வது படமாக வெளியான ‘சிறை’ திரைப்படம், ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. ‘கும்கி’ மூலம் அறிமுகமாகி, ‘டாணாக்காரன்’ மூலம் கவனிக்க வைத்த விக்ரம் பிரபுவுக்கு, இந்தப் படம் மற்றுமொரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.சிறைக் கைதியின் காதல் கதையையும், இஸ்லாமியர்கள் மீதான சமூகப் பார்வையையும் அழுத்தமாகப் பேசியுள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார், அனிஷ்மா, அனந்தா மற்றும் மூனார் ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வெறும் ரூ. 6 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம்,

இதுவரை தமிழில் மட்டுமே வெளியாகி ரூ. 31.58 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகாத நிலையில், இந்த வசூல் எண்ணிக்கை தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் விக்ரம் பிரபு மீண்டும் தனது சந்தை மதிப்பை நிரூபித்துள்ளார்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News