Monday, April 13, 2026

“மங்காத்தா” ரீ-ரிலீஸ் வசூல் வேட்டை..!! முதல் நாளில் இத்தனை கோடி வசூலா..??

வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியாகி சரித்திரம் படைத்த ‘மங்காத்தா’ திரைப்படம், மீண்டும் திரையரங்குகளை அதிர வைத்துள்ளது. அஜித்தின் 50-வது படமான இது, ஹீரோவே வில்லத்தனம் கலந்தவராக நடிக்கும் ‘ஆன்டி-ஹீரோ’ பாணியை தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக மாற்றிக்காட்டியது.

யுவன் சங்கர் ராஜாவின் அதிரடி இசை மற்றும் அர்ஜுன், த்ரிஷா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் இப்படத்தின் மிகப்பெரிய பலம்.அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், நேற்று மறுவெளியீடு (Re-release) செய்யப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

இதன் விளைவாக, ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளிலேயே தமிழகத்தில் மட்டும் சுமார் ₹5.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 13 ஆண்டுகள் கடந்தும் மங்காத்தாவின் மவுசு குறையவில்லை என்பதை இந்த பிரம்மாண்ட வசூல் நிரூபித்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News