Wednesday, April 15, 2026

ஒரே நாளில் ரூ.20,000 உயர்ந்த வெள்ளி..!! அதிர்ச்சியில் மக்கள் ..!!

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்படும் மாற்றங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். இந்நிலையில், இன்று வெள்ளி விலையானது யாரும் எதிர்பார்க்காத வகையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இன்று ஒரே நாளில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிரடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், நேற்றைய விலையிலிருந்து கிடுகிடுவென உயர்ந்து, இன்று ஒரு கிராம் வெள்ளி 365 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் திடீர் விலை ஏற்றம் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிலோ கணக்கில் பார்க்கும்போது இந்த உயர்வு மலைக்க வைக்கிறது. ஒரு கிலோ வெள்ளிக்கு ஒரே நாளில் 20,000 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி 3,65,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு வெள்ளிப் பொருட்கள் மற்றும் கொலுசு வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தரக் குடும்பத்தினருக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களே இந்தத் திடீர் விலையேற்றத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News