Tuesday, April 14, 2026

குளிர்கால செரிமான பிரச்சனையா..?? மலச்சிக்கலை விரட்டும் 5 முக்கிய காய்கறிகள்..!!

குளிர்காலம் என்றாலே சளி, இருமல், காய்ச்சல் மட்டுமல்ல, செரிமான கோளாறுகளும் அதிகம் ஏற்படும் காலமாகும். இக்காலத்தில் உடலின் மெட்டபாலிசம் குறைவதாலும், நீர்ச்சத்து குறைபாட்டாலும் வயிற்று உப்புசம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் தலைதூக்கும். இதனைத் தவிர்க்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

குறிப்பாக, குளிர்காலத்தில் கேரட் சாப்பிடுவது குடலியக்கத்தை சீராக்கி மலத்தை மென்மையாக்கும். மக்னீசியம் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பசலைக்கீரை, மலச்சிக்கலைத் தடுப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். அதேபோல், சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் முட்டைக்கோஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துகள் செரிமான மண்டலத்தை வலுப்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மேலும், பச்சை பட்டாணியை உணவில் சேர்ப்பதன் மூலம் நல்ல குடல் பாக்டீரியாக்கள் அதிகரித்து செரிமானம் சீராகும். எனவே, இந்த 5 காய்கறிகளைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், குளிர்கால வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News