Monday, March 2, 2026
No menu items!

திரௌபதி 2 வசூல் வேட்டை – மங்காத்தா போட்டியைச் சமாளித்து 3 நாளில் இத்தனை கோடியா..??

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா மற்றும் நட்டி நடராஜ் நடிப்பில் உருவான ‘திரௌபதி 2’ திரைப்படம் கடந்த ஜனவரி 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 14-ம் நூற்றாண்டு வரலாற்றுப் பின்னணியுடன், தற்கால அரசியலையும் இணைத்துப் பேசியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்படம் வெளியான அதே நாளில், அஜித்தின் பிளாக்பஸ்டர் படமான ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் பல பெரிய திரையரங்குகள் மங்காத்தாவிற்கே ஒதுக்கப்பட்டதாகவும், தங்கள் படத்திற்குப் போதிய திரைகள் கிடைக்கவில்லை எனவும் இயக்குநர் மோகன் ஜி கவலையுடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ‘திரௌபதி 2’ வசூலில் சளைக்கவில்லை. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திற்கும் ஆதரவு கிடைத்து வருகிறது. கடும் போட்டி மற்றும் ரீ-ரிலீஸ் படங்களின் ஆதிக்கத்தையும் மீறி, கடந்த 3 நாட்களில் மட்டும் இப்படம் ரூ. 2 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் முத்திரை பதித்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News