Monday, March 2, 2026
No menu items!

“என் முன்னாடியே பேசாதீங்க” – சுதா கொங்கராவுக்கு எஸ்கே கொடுத்த தரமான பதிலடி..!!

‘சூரரைப் போற்று’ புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படக்குழுவினர் கலந்துகொண்ட பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.அதில் பேசிய இயக்குனர் சுதா, “ஜெயம் ரவி மணிரத்னம் சாரிடம் வேலை செய்தவர் என்பதால், முன்கூட்டியே ஸ்கிரிப்ட் படித்துத் தயாராக வருவார்.

ஆனால் சிவகார்த்திகேயனிடம் அந்தப் பழக்கம் இல்லை,” என்று ஒப்பிட்டுப் பேசினார்.இதைக் கேட்டு டென்ஷனான சிவகார்த்திகேயன், “என் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தது போலவே பேசாதீர்கள். நானும் அமரன், மாவீரன், மதராஸி போன்ற படங்களுக்கு முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துத் தயாராகித் தான் நடித்தேன்.

நான் விளையாட்டுத்தனமாக இருப்பதால் வேலை செய்யவில்லை என்று அர்த்தமல்ல,” என்று முகத்தில் அடித்தாற்போல் பதிலடி கொடுத்தார். எஸ்கே-வின் இந்தத் துணிச்சலான பதிலை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News