Monday, March 2, 2026
No menu items!

“அரசன்” படத்துக்கு வந்த திடீர் சிக்கல் ..!! கால்ஷீட் பிரச்சனையால் வெளியேறிய விஜய் சேதுபதி ..!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த விஜய் சேதுபதி, தற்போது படத்திலிருந்து விலகியுள்ளார் என்ற செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வெற்றிமாறன் அழைத்தவுடன் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய் சேதுபதி, தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருப்பதால் ‘அரசன்’ படத்திற்குத் தேவையான தேதிகளை ஒதுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

படக்குழு அவருக்காக 15 நாட்கள் காத்திருந்தும் கால்ஷீட் பிரச்சனை தீராததால், தயாரிப்பாளர் தாணு மற்றும் வெற்றிமாறன் மாற்று நடிகரைத் தேடும் முடிவுக்கு வந்துள்ளனர்.விஜய் சேதுபதிக்கு மாற்றாக, பாகுபலி புகழ் ராணா டகுபதி நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கபடி வீரராக சிம்பு நடிக்கும் இப்படத்தில், அவருக்கு இணையான ஒரு மிரட்டலான கதாபாத்திரத்திற்கு ராணா பொருத்தமாக இருப்பார் எனக் கருதப்படுகிறது. மதுரை, கோவில்பட்டி படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News