Tuesday, April 14, 2026

ஈரான் மீது போர் எச்சரிக்கை.. அமெரிக்காவின் பிரம்மாண்ட போர்க்கப்பல் படை விரைவு..!!

அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல் படை தற்போது ஈரான் நோக்கி அதிவேகமாக விரைந்து கொண்டிருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“ஈரான் தனது அணு ஆயுதக் கனவைக் கைவிட்டுவிட்டு, உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், சமீபத்தில் வெனிசுலாவில் நடத்தப்பட்ட தாக்குதலைக் காட்டிலும்

பல மடங்கு பேரழிவை ஏற்படுத்தும் வகையிலான மிகக் கடுமையான தாக்குதலை ஈரான் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். “ஈரானுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து கொண்டிருக்கிறது,

நேரம் கடந்து கொண்டிருக்கிறது” என டிரம்ப் தனது மிரட்டலில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திடீர் அறிவிப்பால் வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்தப் போர்க்கப்பல் நகர்வு ஈரானுக்கு நேரடி மிரட்டலாகப் பார்க்கப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News