Monday, March 2, 2026
No menu items!

சிவகார்த்திகேயன் மகள் சாதனை – “கனா” படத்திற்காக மாநில விருது வென்ற ஆராதனா..!!

தமிழக அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் இல்லத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 2018-ம் ஆண்டிற்கான சிறந்த பின்னணிப் பாடகிக்கான மாநில விருது, சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘கனா’ திரைப்படத்தில் இடம்பெற்ற “வாயாடி பெத்த புள்ள” பாடல் பட்டிதொட்டியெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மழலை மாறாத குரலில் ஆராதனா பாடிய இப்பாடல், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தது.

தற்போது அந்தப் பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி என்ற அங்கீகாரத்தை அரசு அவருக்கு வழங்கியுள்ளது. தனது முதல் பாடலிலேயே இப்படியொரு உயரிய விருதை வென்றுள்ள குட்டிப் பாடகி ஆராதனாவிற்குத் திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News