Saturday, April 18, 2026

ரோஹித் சாதனை காலி..!! அதிக டி20 போட்டிகளில் விளையாடி பால் ஸ்டிர்லிங் முதலிடம்..!!

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட காலமாகத் தக்கவைக்கப்பட்டிருந்த இந்தியக் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா தன்வசம் வைத்திருந்தார்.தற்போது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மூத்த வீரரான பால் ஸ்டிர்லிங், ரோஹித் சர்மாவின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ரோஹித் சர்மா இதுவரை 159 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பால் ஸ்டிர்லிங் தனது 160-வது போட்டியில் களமிறங்கி இந்தப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.இந்தப் பட்டியலில் அயர்லாந்து வீரர் ஜார்ஜ் டாக்ரெல் 153 போட்டிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

கிரிக்கெட் உலகில் நீண்ட நாட்களாக அசைக்க முடியாத சாதனையாக இருந்த ரோஹித் சர்மாவின் இந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News