Saturday, April 18, 2026

சவரனுக்கு ரூ.7,600 அதிரடி குறைவு..!! இன்றைய தங்கம் விலை நிலவரம்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாகக் குறைந்துள்ளது. வரவிருக்கும் திருமண முகூர்த்த நாட்களை எதிர்பார்த்துக் காத்திருந்த பொதுமக்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக,

இன்று (31.01.2026) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின்

விலை ரூ.7,600 என்ற அளவில் பெருமளவு குறைந்துள்ளது. இதன் மூலம் நேற்றைய விலையிலிருந்து சரிந்து, இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்த நிலையில்,

இன்று ஒரே நாளில் சவரனுக்கு சுமார் 7,600 ரூபாய் வரை குறைந்திருப்பது நகை வாங்குவோரிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலையிலும் மாற்றங்கள் இருக்குமா என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News