Monday, March 2, 2026
No menu items!

ஒரு படத்திற்கு 40 கோடி சம்பளம்..?? சிம்புவின் சொத்து மதிப்பு குறித்துப் பரவும் தகவல்..!!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிம்பு, இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர். தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த சில சுவாரசியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.40 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் தகவல்கள் கசிகின்றன. இருப்பினும், இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல போராட்டங்களைக் கடந்து மீண்டும் முன்னணி இடத்தைப் பிடித்துள்ள சிம்புவின் இந்த வளர்ச்சி அவரது ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. வரும் ஆண்டுகளில் ‘அரசன்’ உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் அவரது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறந்தநாளை முன்னிட்டு அவரது புதிய பட அப்டேட்டுகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News