Thursday, April 16, 2026

உடல் வலிமை பெற முட்டைக்கு மாற்றாக 5 சிறந்த காய்கறிகள் – முழு விவரம் உள்ளே ..!!

உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் முட்டையில் அதிக அளவில் இருந்தாலும், சைவ உணவு உண்பவர்களுக்குப் பல சிறந்த இயற்கை மாற்றுகள் உள்ளன. தசைகளை வலுப்படுத்தும் புரதச்சத்து நிறைந்த பசலைக் கீரையில் ஒரு கப் அளவில் சுமார் 5.4 கிராம் புரதம் கிடைக்கிறது. அதேபோல், 100 கிராம் முருங்கை இலைகளில் வியக்கத்தக்க வகையில் 9 கிராம் புரதமும், இரும்புச்சத்தும் நிறைந்துள்ளன.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ப்ரோக்கோலியில் 2.8 கிராம் புரதமும், மூளை ஆரோக்கியத்திற்கு உதவும் காளான்களில் 3.1 கிராம் புரதமும் உள்ளன. மேலும், செரிமானத்திற்கு உதவும் பட்டாணியில் 100 கிராமுக்கு 5 கிராம் புரதம் கிடைப்பதாகப் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, முட்டை சாப்பிடாதவர்களும் இந்தக் காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெற முடியும்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News